விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் கடைகள் அடைப்பு

கோவை : விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.


கோவை : விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.

மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து 5 -வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 13 மாவட்டங்களில் 8 மையங்களில் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

அந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கோவை மாவட்டம் செஞ்சேரிமலை, செஞ்சேரி பிரிவு, சுல்தான்பேட்டை மற்றும் திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.



இது குறித்து ஏர்முனை இளைஞர் அணியைச் சார்ந்த சுரேஷ் கூறுகையில், "இந்த காத்திருப்புப் போராட்டமானது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக நடைபெற்று வருகிறது. எங்களது போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இதனிடையே, இன்று எங்களுக்கு ஆதரவு தெரிவித்து செஞ்சேரிமலை, செஞ்சேரி பிரிவு, சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இதற்கு விவசாய சங்கத்தின் கூட்டியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...