விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்து திருப்பூர் உழவர் சந்தைகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் : ரூ.25 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் தேக்கம்

திருப்பூர் : விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் உழவர் சந்தைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.25 லட்சம் மதிப்பிலான 500 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர் : விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் உழவர் சந்தைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.25 லட்சம் மதிப்பிலான 500 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. 

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரங்கள் அமைத்துக் கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது . இதனால், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. 



இதனைக் கண்டித்தும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கேரளா மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ளது போல கேபிள் வழியாக நெடுஞ்சாலைத்துறை ஓரங்களின் வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசை விவசாயிகள் வலியுறுத்தினார்கள். விவசாயிகளின் இத்தகைய கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

எனவே, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 5 -வது நாளான இன்று திருப்பூர் மாவட்ட உழவர் சந்தைகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். திருப்பூரில் தெற்கு, வடக்கு, அவினாசி, பல்லடம் மற்றும் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளின் உழவர் சந்தைகளில் மொத்தம் 1000 கடைகள் உள்ளது.



இந்த மொத்த கடைகளும் இணைந்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்ட முழுவதும் ஒரு நாளுக்கு மட்டும் 500 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், இதன் மூலம் முழுவதும் 20000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில், சுமார் 5 லட்சம் பொதுமக்கள், சிறிய காய்கறி கடைகள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...