நீலகிரி : நீதிமன்ற உத்தரவை மதிக்காத 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மனு அளித்தார்.

நீலகிரியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். கோவையில் கடந்த 2010 -ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015 -ம் ஆண்டு ஆம்புலன்ஸ் நிர்வாகம் தன் மீது பொய்யான புகார் கூறி, வேலையை விட்டு நீக்கி விட்டதாகத் தொழிலாளர் நலத்துறையை அணுகி புகார் அளித்து உள்ளார்.
இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின் பிரவீன் குமாரின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து அவரைப் பணியில் மீண்டும் அமர்த்த தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், 108 நிர்வாகம் அவருக்குப் பணி வழங்கவில்லை. மீண்டும் பணியில் அமர்த்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகக் கூறி இழுத்தடிப்பு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரவீன் குமார் உயர்நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி தொழிலாளர் நலத்துறை அளித்த உத்தரவு நகலே போதுமானது. அதன் அடிப்படையிலே பணி நீக்கத்தை ரத்து செய்து பணியில் அமர்த்தலாம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பிரவீன்குமார் நேற்று முன் தினம் மீண்டும் பணிக்கு சென்று ஆம்புலன்ஸை எடுத்துள்ளார். அப்போது 108 நிர்வாகம், அவரை ஆம்புலன்ஸ் ஓட்ட அனுமதிக்க முடியாது என மிரட்டியதாகக் கூறும் பிரவீன்குமார், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "என் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக என் மனைவி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தையும், என் வழக்குக்கு தேவையான உதவியையும் செய்து வந்தார். தொழிலாளர் நலத்துறை, நீதிமன்றமும் உத்தரவிட்டும் பின்னும் அதனை மதிக்காமல் வேண்டுமென்றே பழிவாங்கும் உணர்ச்சியில் 108 நிர்வாகம் செயல்படுகிறது. என்னை மீண்டும் பணியில் அமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
மேலும், விரைவில் தன்னுடைய பணி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.