கோவை : இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 22-வது மாநில மாநாடு கோவையில் வரும் 22-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கின்றன.

இதையொட்டி, கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அவர்கள் கூறியதாவது :- இந்த மாநாடு அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் 22-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. மாநாட்டை உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்கிறார். மேலும், முதல் நாள் நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலா, கியூபா குடியரசு தூதர் மார்டினஸ் கார்டோவ்ஸ், வியட்நாம் தூதர் ஹாங் டிம் ஹன், ரஷ்யா கான்சில் ஜெனரல் ஓலக் அவ்தீவ், கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார், இந்திய தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர், பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநில கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இரண்டாம் நாள் நிகழ்வில், பிரதிநிதிகள் விவாதமும், மாலையில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. இதில், இன்றைய சூழலில் காந்தியத்தின் தேவை என்ற கருத்தரங்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் மனிதகுல ஒற்றுமையை வலுப்படுத்துவதில் கலை இலக்கியத்தின் பங்கு என்ற தலைப்பில் கவிஞர். சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கொடிசியா முன்னாள் செயலாளர் ஏ.வி. வரதராஜன் மற்றும் நாடகக் கலைஞர் திலீப்குமார் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. மூன்றாம் நாள் நிறைவு விழாவில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் பின்னர் உலக அரங்கில் இந்தியா, இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் இந்தியாவின் பங்கு, கருத்துரிமை பாதுகாப்பும், எழுத்தாளர்களும், இந்தியாவின் ஒற்றுமைக்கு வழி மதச்சார்பின்மையே என்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது, என்றனர்.