குன்னூரில் முள்கம்பியில் சிக்கித் தவித்த சிறுத்தை சடலமாகக் கண்டெடுப்பு : வனத்துறையினர் விசாரணை

நீலகிரி : குன்னுாரில் முள் கம்பி வேலியில் சிக்கித் தவித்த சிறுத்தை வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : குன்னுாரில் முள் கம்பி வேலியில் சிக்கித் தவித்த சிறுத்தை வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று குன்னுார் அருகே உள்ள வண்டிசோலை பகுதியில் 3 வயதுள்ள சிறுத்தை ஒன்று தனியார் குடியிருப்பு அருகில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டனர். 

இது குறித்து வன அதிகாரிகள் கூறும்போது :- கடந்த 12-ம் தேதி முள் கம்பியில் சிறுத்தையின் கால் சிக்கியபடி, வேலியின் மேற்புறத்தில் சிமெண்ட் கம்பத்தில் நின்று தவித்துக் கொண்டிருந்தது. இதையறிந்து பொதுமக்கள் கூடியதால் சுமார் ஒரு மணிநேரம் தவித்த சிறுத்தை கம்பியை பிய்த்துக்கொண்டு தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. இதைத் தொடர்ந்து, உடல் கிழிந்த நிலையில் வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. உடல் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த சிறுத்தையை, கரடி அல்லது வேறு விலங்குகள் தாக்கியதால் இறந்திருக்க வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, இவ்வாறு அவர்கள் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...