நீலகிரி : கோட நாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்த 3 -வது குற்றவாளியை உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் கேரள காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

மறைந்தமுன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளியின் கொலை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் 3-வது குற்றவாளியான தீபு, கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, கேரளா மாநிலம் கண்ணணூரில் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தலைச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீபுவை இன்று கேரளா மாநில போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை பிடிவாரண்டை ரத்து செய்து வரும் ஜனவரி மாதம் 10 -ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த விசாரணைக்கு பின் கைதி தீபுவை, கேரள போலீஸார் அம்மாநில சிறைக்கு அழைத்து சென்றனர்.