கருஞ்சட்டை பேரணிக்கான அனுமதி நியாயத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி : கு. ராமகிருட்டிணன் கருத்து

கோவை : திருச்சியில் கருஞ்சட்டை பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது, நியாயத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி என த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

கோவை : திருச்சியில் கருஞ்சட்டை பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது, நியாயத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி என த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார். 

காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 23-ம் தேதி பல்வேறு அமைப்புகள் இணைந்து திருச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் கருஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை விதித்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்திருப்பது, நியாயத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி. 

பெரியார் கொள்கைகளை நிலைநிறுத்த இந்தப் பேரணியை நடத்த உள்ளோம். மதவெறி, சாதிவெறிக்கு எதிராக பெரியார் கருத்துகளை மக்களிடம் எடுத்து செல்வதே இப்பேரணியின் நோக்கமாகும். அண்ணா பெயரில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு பெரியார் பேரணிக்கு அனுமதி மறுத்து, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கிறது. இது அண்ணாவிற்கு அ.தி.மு.க. செய்யும் துரோகம். 

கருஞ்சட்டைப் பேரணி 2 மணிக்கு தொடங்கும். மாலை திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடைபெற உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பெரியார் இயக்க கொள்கை அமைப்புகள், தலித் அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டிற்கு திராவிட இயக்க மூத்தத் தலைவர் கி.வீரமணி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர், இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...