உதகை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் திட்டத்தை கைவிடக் கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி : உதகையில் செயல்பட்டு வரும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரி பட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி : உதகையில் செயல்பட்டு வரும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரி பட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு குறித்து ஆராய்ச்சி செய்யவும், நோய் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கடந்த 1957-ம் ஆண்டு உதகையை அடுத்த முத்தோரை பாலாடா பகுதியில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை அப்போதைய மத்திய அரசு தொடங்கியது. 



இந்த ஆராய்ச்சி நிலையம் நூல் புழு மற்றும் இலை கருகல் நோய்கள் தாக்காத உருளைக்கிழங்கு விதையைக் கண்டுபிடித்தது. மேலும், திசுவளர்ப்பு, மகரந்த சேர்க்கை போன்ற முறைகள் மூலமாக குப்ரிகிரி தாரி, குப்ரி சூர்யா உள்பட பல வகையான உருளைக்கிழங்கு ரகங்களையும் கண்டுபிடித்து, அவற்றின் விதைகளை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு அளித்து வருகிறது. 3 ஆராய்ச்சியாளர்கள், 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 12 நிரந்தர பணியாளர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக வணிகர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்தை, தற்போது மத்திய அரசு மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதற்கான பரிந்துரையை மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம், மத்திய வேளாண்துறைக்கு அனுப்பியுள்ளது. இதனால், இந்த நிலையம் விரைவில் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தென்னிந்தியாவிலேயே உதகையில் உள்ள ஒரே ஒரு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் திட்டத்தை கைவிடக் கோரியும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று உதகை ஏ.டி.சி. திடல் முன்பு பட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே மணி தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...