திருப்பூர் : 3 நாட்கள் நடக்கும் அனைத்துலக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு, மதுரையில் இந்த மாத இறுதியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம், தமிழ் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளின் ஆதரவுடன் டிசம்பர் 28 -ம் தேதி தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்விற்கு பின்னலாடை தொழில்துறையினருக்கு அழைப்பு விடுக்க அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழுவினர் இன்று திருப்பூருக்கு வருகை புரிந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஒருங்கிணைப்பு குழுவினர் பேசுகையில், "தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாட்டின் முக்கிய நோக்கமே வேலை தேடுவதை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம், பலருக்கு வேலை தரும் தொழில்முனைதல் சமூகமாக மாறும் விருப்பத்தினை இம்மாநாட்டின் மூலமாக அறிவிக்க உள்ளோம்.
மேலும், இது பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பமர்வு, பொறியியல் கல்லூரிகள் சந்திக்கும் சவால்கள், சில்லறை வணிகத்தில் சவால்களை எதிர்கொள்வதற்கான வழிகள் ஆகியவை இடம்பெற்ற மாநாடாக இருக்கும். இம்மாநாட்டில் உலக புகழ்பெற்ற மலேசிய தொழிலதிபர் டத்தோ பழனியப்பன், துபாய் நாட்டைச் சேர்ந்த டெக்கான் லட்சுமணன், துபாய் ஆல்பர்ட் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்," என்றார்.