சென்னை : தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு குழுவினர் தயாரிப்பாளர் சங்க அலுவலக கட்டிடத்திற்கு பூட்டு போட்ட நிலையில், அதனை உடைக்க முயன்ற நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் ஏ.எல். அழகப்பன், டி.சிவா, ஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் ஆகியோர் அடங்கிய ஒருதரப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.
இதனிடையே, பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர்கள் முதலமைச்சரிடம் சினிமா சங்கங்களில் நிலவும் பிரச்சினைகளை சமாளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கக் கோரிக்கை விடுக்கப்போவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஷால் மற்றும் அவருக்கு ஆதரவான தயாரிப்பாளர்கள் இன்று தி.நகர் காவல் நிலையம் அருகே திரண்டனர். அப்போது, விஷால் தரப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.