கடற்படை -அமிர்தா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோவை : கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை இணைந்து மேற்கொள்வதற்காக கோவை அமிர்தா பல்கலைக்கழகம், இந்திய கடற்படை இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கோவை : கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை இணைந்து மேற்கொள்வதற்காக கோவை அமிர்தா பல்கலைக்கழகம், இந்திய கடற்படை இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சி கோவை, எட்டிமடையில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யா பீடம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தென் மண்டல கடற்படையின் தலைமை கமாண்டர் அனில்குமார் சாவ்லாவும், பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வெங்கட்ரங்கன் ஆகியோரும் இதற்கான உடன்படிக்கையை பரிமாறிக் கொண்டனர்.



இது குறித்து கமாண்டர் அணில்குமார் சாவ்லா கூறும் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை எங்களால் பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப அடிப்படையில் இணைந்து செயல்பட இது ஒரு நல்ல வாய்ப்பு. 

மேலும், கடற்படை வீரர்களை மேம்படுத்தும் வகையில் சிறந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும்போது, உயர்தரமான கல்வி அறிவைப் பெற முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பி.எஸ்.ஜி கல்லூரியிலும், சென்னை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐஐடியிலும் செய்யப் போவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், கடற்படை அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...