கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் மன்னிஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அன்னூரில் அமைந்துள்ள மன்னிஸ்வரர் சிவாலயம் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இக்கோவிலில் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் சிவலிங்கத்தின் இருபுறமும் இறக்கைகள் இருப்பது கோவிலின் மற்றுமொரு சிறப்பு. கடந்த 2000 -ம் ஆண்டு முதல் இக்கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இத்தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் தேர் திருவிழா கடந்த 14 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி மாலையில் சாமி திருவீதி உலா மற்றும் உற்சவங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த தேரோட்டத்தில், கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்தனர்.
மேலும், இந்த திருவிழாவில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் உள்ளிட்ட பல துறவிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.