கோவை : குனியமுத்தூர் அருகேயுள்ள அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நேற்று நள்ளிரவில் கல்வீசிய நபரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள குனியமுத்தூர் அருகே மைல்கல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அமைச்சர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல் வீசியுள்ளார். இதில் அமைச்சர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்துள்ளது.

அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்க்கையில், கல் வீசிய நபர் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, காவல்துறை அவரைத் துரத்தி பிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், கல் வீசிய பாலக்காட்டை சேர்ந்த சிவதாஸ் (27), அமைச்சர் இல்லம் அருகில் உள்ள இரும்பு கடையில் உதவியாளராக வேலை செய்துவருகிறார் எனத் தெரியவந்துள்ளது. மேலும், குடிபோதையில் இருந்த சிவதாஸ் லேசாக மனநலமும் பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.