ஏழ்மைக்கு இரங்கி சொந்த பணத்தில் காப்பீடு போட்டு கொடுத்த சிங்காநல்லூர் காவலருக்கு குவியும் பாராட்டுகள்

கோவை : ஒண்டிபுதூர் அருகே ஏழ்மையின் காரணத்தினால் காப்பீட்டை கூட போடாமல் தவித்து வந்த நபருக்கு தன் சொந்த பணத்தில் காப்பீட்டை போட்டுக்கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை : ஒண்டிபுதூர் அருகே ஏழ்மையின் காரணத்தினால் காப்பீட்டை கூட போடாமல் தவித்து வந்த நபருக்கு தன் சொந்த பணத்தில் காப்பீட்டை போட்டுக்கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

காவலர்கள் என்றாலே வசூல் செய்பவர்களாகவும், பொதுமக்களை அச்சுறுத்தபவர்களாகவுமே பார்க்கப்படுகிறது.இதனால் காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்ல ஒரு உடன்பாடுகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அவினாசி சாலையில் உள்ள வெள்ளாணைப்பட்டி அருகேயுள்ள செரயாம்பாளையத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி சரவணனுக்கு, உதவி ஆய்வாளர் முருகன் தன் சொந்த பணத்தில் காப்பீட்டை போட்டுக்கொடுத்துள்ளார். 

சரவணனின் மனைவி சுதா. இருவருக்கும் ஒரு மகள். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒண்டிப்புதூர் மேம்பாலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சரவணன் சென்று கொண்டிருந்த போது அந்தச் சாலையின் ஒரு புறத்தில் வாகன சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிங்காநல்லூர் காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் முருகன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

இதையடுத்து, அவர் சரவணனிடம் காப்பீட்டை வாங்கி ஆய்வு செய்தபோது, வாகன காப்பீட்டை தேதி நிறைவடைந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்து, அபராதம் விதிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். அப்போது சரவணன், உதவி ஆய்வாளர் முருகனை அணுகி, ’’கடலூரைச் சேர்ந்த நானும், மனைவி சுதாவும் காதல் திருமணம் செய்து கொண்டதால், இரு வீட்டாரும் எங்களை ஏற்கவில்லை. இதனால் கோவைக்கு குடிபெயர்ந்து, கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகிறேன். 

சில மாதங்களுக்கு முன்னர் மனைவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளியே லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்தேன். இதனால் தற்போதைய சூழலில் தன் குடும்பம் மிகவும் சிரமத்தில் உள்ளதால், காப்பீட்டை தொகை எடுக்க பணம் இல்லை," என சோகமாக தெரிவித்துள்ளார். மேற்கொண்ட விசாரணையில் சரவணன் கூறியது உண்மை என ஆய்வாளர் அறிந்து கொண்டார். 

இதையடுத்து, ஆய்வாளர் முருகன் தன் பணத்தைச் செலவு செய்து தனியார் வாகன காப்பீட்டை நிறுவனத்தில் ரூ.1,163 மதிப்பில் காப்பீட்டை எடுத்து சரவணனிடம் கொடுத்தார். இந்த சம்பவம் அறிந்த பொதுமக்கள் போக்குவரத்து காவலரின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...