மத்திய அரசின் வங்கிகள் இணைப்புத் திட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் எதிர்ப்பு : நாளை போராட்டம்

கோவை : 3 வங்கிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை மறு நாள், நாடு முழுவதும் வங்கிகள், வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கோவை : 3 வங்கிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை மறு நாள், நாடு முழுவதும் வங்கிகள், வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மத்திய அரசு, தேனா வங்கி, பரோடா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய பெரிய வங்கியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் வங்கி இணைப்பு கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் டிசம்பர் 21 -ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

அதில் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் வரும் 26 -ம் தேதி அன்றும் இதே கோரிக்கைகளை வலிறுத்தி வேலை நிறுத்தம் செய்ய 2 வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

தொடர்ந்து 4 -வது சனிக்கிழமை, ஞாயிறு விடுமுறை, கிறிஸ்துமஸ் என விடுமுறைகள் வரிசைகட்டியுள்ளன. எனவே, 24 -ம் தேதி திங்கள் கிழமை ஊழியர்கள் அதிகளவில் விடுப்பில் செல்ல வாய்ப்புள்ளது. இந்தப் போராட்ட அறிவிப்பு மற்றும் விடுமுறைகளால், வங்கிச் சேவைகள் 6 நாட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறும் போது, வங்கிகள் இணைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான கிளைகளை மூடும் நிலை உள்ளது. ஒரு புறம் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘‘ஜந்தன் யோஜனா’’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து விட்டு மறுபுறம் வங்கி இணைப்பு என்ற பெயரில் கிளைகளை மூடும் திட்டத்தை அறிவிப்பது ஏற்புடையது அல்ல. 

மேலும், வங்கிகள் போன்ற பொதுத்துறை மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மூடும் நடவடிக்கையால் வேலை வாய்ப்பு குறையும். எனவே இந்த முடிவு பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல.

வங்கிகளை விரிவுபடுத்தும் அவசியம் இருக்கின்ற போது அவற்றை இணைப்பது தவறான கொள்கை. அதுமட்டுமின்றி பெரும் முதலாளிகள் திருப்பி செலுத்தாத வாராக்கடன்களை வசூலிப்பதே வங்கிகளின் தலையாய கடமையாகும். அதனை விடுத்து வங்கி இணைப்பு கொள்கையில் ஆர்வம் காட்டுவது அடிப்படை பிரச்சினையில் இருந்து விலகி நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக அமைந்துள்ளது.

எனவே, வங்கி இணைப்பு கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 26-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதன் காரணமாக வங்கி பணிகள் முழுமையாகப் பாதிக்கப்படும். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 10 லட்சம் பேர் இதில் பங்கேற்கிறார்கள், என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...