தினமும் கற்றால் புது விஷயங்கள் கவனத்துக்கு வரும் : கோவை உயர்கல்வி மேம்பாடு மாநாட்டில் ரேவதி காண்ட் பேச்சு

கோவை : கோவையில் உயர்கல்வி தொடர்பான உயர்கல்வி இயக்கிகள் 3.0 : தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, போட்டியிடுதல் என்ற தலைப்பிலான இரண்டு நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது.

கோவை : கோவையில் உயர்கல்வி தொடர்பான உயர்கல்வி இயக்கிகள் 3.0 : தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, போட்டியிடுதல் என்ற தலைப்பிலான இரண்டு நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது.

கோவை மாவட்டம், ரெசிடன்ஸி ஓட்டலில் நேற்று கோவை மண்டல இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சி.ஐ. ஐ.,) ம் சார்பில், உயர்கல்வி தொடர்பாக இரண்டு நாட்கள் மாநாடு தொடங்கியது. அந்த மாநாட்டில் "உயர்கல்வி இயக்கிகள் 3.0: தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, போட்டியிடுதல்" ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இதையடுத்து, அந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களில் உள்ள நிர்வாக இயக்குனர்கள், செயலாளர்கள், கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 200 பேர் பங்கேற்றனர். கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மற்றும் என்.ஜி.ஓ.,க்களை சேர்ந்த 20 -க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் கருத்துரை வழங்குகின்றனர். 

இதில் சிறப்பு விருந்தினரான டைட்டன் நிறுவனத்தின் துணைத்தலைவரும், தலைமை டிசைன் அதிகாரியுமான ரேவதி காண்ட் பேசுகையில், ''மாணவர்கள், ஆசிரியர், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் தினந்தோறும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்கத் தொடங்கினாலே, நிறைய புது விஷயங்கள் நமது கவனத்துக்கு வரும்'' என்றார். 

மேலும், சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் ரமேஷ், சி.ஐ.ஐ., கல்விப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் அலமேலு ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...