திண்டுக்கல் : பழனியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய புகாரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ள சத்நிரப்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவர் கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் கீரனூரில் உள்ள குருகுலம் ஆசிரமத்திற்கு சட்டப்பணிகள் குழுவினர் ஆய்வுக்கு சென்றனர். அங்கு ஆசிரமத்தில் தங்கி கீரனூர் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவிகளிடம் குறைகளை கேட்டனர். அப்போது, பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் ஆசிரியர் ஸ்டீபன்ராஜ் ஆபாசமாக பேசியது தெரியவந்தது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தனர். சட்டப்பணிகள் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதி பழனி அனைத்தும் குளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்து, மாணவிகளின் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அதன்படி, இன்று கீரனூர் அரசு பள்ளிக்கு சென்ற போலீசார், அங்கு பயிலும் மாணவிகளிடம் விசாரணை செய்தனர். அதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் ஸ்டீபன்ராஜை போலீசார் கைது செய்து பழனி அனைத்தும் குளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஸ்டீபன்ராஜ் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாத எழுந்த புகாரின்பேரில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையால் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.