கோவை : கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசியை மாவட்ட வழங்கல் அலுவல அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சார்பில் வழங்கப்படும் ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்பட்டுச் சென்று அங்கு 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடத்தி செல்லப்படும் ரேசன் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலை கிடைப்பதால் கடத்தல் காரர்கள் பல்வேறு வகையான யுக்திகளை கையாளுகின்றனர். ரயில்கள் மூலம் அதிக அளவில் அரிசி கடத்தப்படும் தகவல் அறிந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் இன்று கிடைக்க பெற்ற ரகசிய தகவலின்படி, எட்டிமடை ரயில் நிலையம் மற்றும் க.க.சாவடி பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
எட்டிமடை ரயில் நிலையத்தில் 700 கிலோவும், க.க.சாவடி பேருந்து நிலையத்தில் 300 கிலோ என மொத்தம் 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 30000 ஆகும்.