நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை : கோவையில் வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியினை வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

கோவை : கோவையில் வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியினை வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். 



அப்பகுதிகளில் பதிவாகும் வாக்குகளைக் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்துப் பாதுகாப்பாக எண்ணத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாகத் தடுப்புகள் அமைப்பது தொடர்பாக அலுவலர்களிடம், மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...