நீலகிரி : டீசர்வ் தேயிலை ஏலத்தில் இரு வாரங்களில் சராசரி விலையில் கிலோவுக்கு, ரூ.5 விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை தூள் குன்னூர் 'டீசர்வ்' ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டுக்கான 50 -வது ஏலத்தில், இலை ரகம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 380 கிலோ, டஸ்ட் ரகம் 1 லட்சத்து, 46 ஆயிரத்து 665 கிலோ என மொத்தம், 3 லட்சத்து 31 ஆயிரத்து 35 கிலோ விற்பனைக்கு வந்தது.

கடந்த இரண்டு வாரத்தினை இந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ஏலத்தில் 10 ஆயிரம் கிலோ மட்டுமே வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இலை மற்றும் டஸ்ட் ரகங்கள் 99.90 சதவீதம் விற்பனையாகின. இருப்பினும், கிலோவுக்கு ரூ.89.22 மட்டுமே சராசரி விலை கிடைத்தது. இரண்டு வார ஏலத்தை ஒப்பிடும் போது, கிலோவிற்கு ரூ.5 வரை சராசரி விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
மேலும், மொத்த தேயிலை விற்பனையால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 7 ஆயிரத்து 968 வரவு கிடைத்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக தேயிலை விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.