கோவை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை திருப்பிப் பெற்று தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.

செல்வபுரம் செளடேஸ்வரி காலனி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் உக்கடம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி குஞ்சுமோன், சாந்தி, காயத்திரி ஆகியோர் தன்னிடம் இருந்து ரூ.86 ஆயிரம் பெற்று கொண்டு தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து அவர் கூறுகையில், "மோசடியில் ஈடுபட்ட குஞ்சுமோன் என்னை அணுகி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகளில் உங்களுக்கும் வீடு வாங்கித் தருகிறேன் எனக் கூறினார். இதற்காக 2011 -ம் ஆண்டு முன்பணமாக ஒரு தொகை பெற்றது மட்டுமில்லாமல், தவணைகளாக ரூ.76 ஆயிரம் பணத்தை குஞ்சுமோன், அவரது மனைவி சாந்தி மற்றும் காயத்திரி ஆகியோர் பெற்று கொண்டனர்.
இதையடுத்து, வீடு வாங்கித் தராத காரணத்தால் பணத்தை திருப்பிக் கேட்டபோது, 'நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது உங்களால் ஆனதைப் பார்த்து கொள்ளுங்கள்,' என என்னை மிரட்டினார்," என்றார்.
மேலும், தங்களை ஏமாற்றி பணம் பெற்றவரிடமிருந்து இழந்த பணத்தை திருப்பிப் பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதேபோலவே, பணத்தைக் கொடுத்து ஏமாந்த 5 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரும், வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.