புட்டுவிக்கி சாலை புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை : பாலக்காடு சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர் பைபாஸ் சாலைக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.


கோவை : பாலக்காடு சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர் பைபாஸ் சாலைக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் புட்டுவிக்கி பாலம் அருகில் உள்ள இணைப்பு சாலை மற்றும் பேரூர் பைபாஸ் வழியாக அனுமதிக்கப்பட்டது.



இதனால், வாகன ஓட்டிகள் உக்கடத்தை அடைவதற்கு பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும், மழைக் காரணமாக புட்டுவிக்கி பாலம் அருகே உள்ள இணைப்பு சாலை படுமோசமான நிலையில் காட்சியளித்தது. குனியமுத்தூர், தொண்டாமுத்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் கோவைக்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள் சேதமான சாலையைக் கடப்பதில் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், பாலக்காடு சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர் பைபாஸ் சாலைக்கு இடையில் சுமார் 3 கி.மீ அளவிற்கான இணைப்பு சாலையை புதுப்பிக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை, கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சாலை புனரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து, விரைவில் அப்பணிகள் முடிக்கப்படும்," என்றனர். 

சாலை புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், வாகனங்கள் சுண்டக்காமுத்தூர் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...