கோவை: சவுரிபாளையம் பள்ளியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சொந்தமான இடத்தை, அரசுக்கு பாத்தியப்பட்ட இடம் என்று அதிகாரிகள் கூறியதால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சவுரிபாளையம் பகுதியில் சபேரியா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் பங்காளர்களாக உள்ளனர். இந்த ஆலயத்துக்குச் சொந்தமாக கல்லறை வீதியில் உள்ள இடமானது கடந்த 1968 -ல் அரசால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்திற்கு அருகிலேயே ஆலய கட்டுப்பாட்டில் செயல்படும் பிலோமீனால் பள்ளியானது இயங்கி வருகின்றது. இந்தச் சூழலில், இன்று ஆலய கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்திற்கு தெற்கு வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சென்றனர். மேலும், ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில், "இந்த இடம் அரசுக்குச் சொந்தமான இடம்" என்று திடீரென பெயர் பலகையை வைத்தனர்.

இதையடுத்து, ஆலயத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வந்த வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு பலகையை அகற்றினர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.