திருப்பூர் : உடுமலையில் உடல் ஆரோக்கியம் மற்றும் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி 40 ஆயிரம் கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்ட சேலம் இளைஞர் உடுமலை வந்தடைந்தார்.
திருப்பூர் : உடுமலையில் உடல் ஆரோக்கியம் மற்றும் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி 40 ஆயிரம் கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்ட சேலம் இளைஞர் உடுமலை வந்தடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இயற்கை வளத்தைப் பாதுகாக்க, உடல் ஆரோக்கியத்தைப் பேணி காக்க மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ராஜராஜன் என்ற இளைஞர் சுற்று பயணம் மேற்கொண்டார்.
கடந்த 2017 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் சேலத்தில் தொடங்கி ஆந்திரா, ஓரிசா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மிதிவண்டியில் சென்றுள்ளார். அந்த பயணத்தின் ஒருபகுதியாக தற்பொழுது உடுமலை வழியாக வந்து, கர்நாடக செல்லும் ராஜராஜனுக்கு மாணவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜராஜன் மாணவ மாணவியர்களுக்குத் துண்டு அறிக்கைகள் வழங்கி மிதிவண்டி பயணத்தின் நோக்கம் குறித்து எடுத்து உரைத்தார். மேலும், இந்த மிதிவண்டி பயணம் உடுமலையிலிருந்து கர்நாடக சென்று, பின்பு கோவா வழியாக ஜம்மு காஷ்மீர் சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து சேலத்தில் முடிவடைகிறது.
மேலும், இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெஞ்சமீன் உட் என்பவர் 18 ஆயிரம் கி.மீ மிதிவண்டியில் பயணம் செய்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. அதனை முறியடிக்கும் வகையில் தற்பொழுது சேலம் இளைஞர் 10 -க்கும் மேற்பட்ட மாநிலங்கள் 20 ஆயிரம் கி.மீ மேல் பயணம் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.