சிங்காநல்லூர் வாலிபர் இறப்பில் சந்தேகம் : விவாதத்தில் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்த உறவினர்கள்

கோவை : சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்ததாக விவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள், விவாதம் முற்றிய நிலையில் மருத்துவமனையின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியுள்ளனர்.


கோவை : சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்ததாக விவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள், விவாதம் முற்றிய நிலையில் மருத்துவமனையின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியுள்ளனர்.



கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவரது மகன் முகம்மது ரபீக் (29). நேற்றிரவு வயிற்று வலி காரணமாக வி.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முகம்மது ரபீக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, இவரின் இறப்புக்கு தவறான சிகிச்சை தான் எனக் கூறி அவரது உறவினர்கள் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த விவாதம் முற்றிய நிலையில் உறவினர்கள் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



மேலும், தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...