கோவை : புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகளின் உடல் எடையைச் சீராக்க காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செல்லும் யானைகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. 28 யானைகள் பங்கேற்றுள்ள இம்முகாமில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் தினந்தோறும் பவானி ஆற்றில் குளியல், கலவை சாதம், யானைகளின் எலும்புகளை வலுவடைய கொள்ளு, அஸ்டசூரணம், பசுந்தீவனம் போன்ற ஊட்டச்சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், யானைகள் சராசரியாக 20 கிலோ மீட்டருக்கு மேல் நடந்தால் மட்டுமே அதன் உடல் எடை சீராக இருப்பதுடன் செரிமானம் ஆகும். ஆனால், கோவில்களில் ஒரே இடத்தில் நின்றவாறு இருக்கும் இந்த யானைகளின் உடல் எடையைக் கட்டுப்படுத்த யானைகளுக்குக் காலை மாலை நடைப்பயிற்சி அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கால்நடை மருத்துவக்குழுவின் ஆலோசனையின் படி முகாமில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு யானைகளுக்கும் அதன் எடைக்கு ஏற்றவாறு காலை, மாலை என இரு வேளைகளும் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, முகாமில் 28 யானைகளும் ஒரு சேர அணிவகுத்து நடைப்பயிற்சியில் ஈடுபடுவது பார்ப்பவர்களின் கண்ணைக் கவர்ந்து வருகிறது. நடைப்பயிற்சிக்கு பின்னர் யானைகளுக்கு பசுந்தீவனம், கலவை சாதம் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த முகாம் நிறைவடைவதற்குள் ஒவ்வொரு யானைக்கும் உடலுக்கு ஏற்ற எடையைச் சீர் செய்ய மருத்துவர்கள் செயல்பட்டு வருவதாக முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.