கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் உபகரணங்களை போலீஸ் ஐ.ஜி. கே.பெரியய்யா வருடாந்திர ஆய்வு செய்தார்.

கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் உபகரணங்கள் வருடாந்திர ஆய்வு செய்யும் பணி போலீஸ் பயிற்சிக்கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கே.பெரியய்யா பங்கேற்று உபகரணங்களை ஆய்வு செய்தார்.

ஆயுதப்படை போலீஸார் 600 பேரின் அணிவகுப்பு நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார். போலீஸாரின் 250 வாகனங்களின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார்.

பின்னர், போலீஸார் கலவர ஒத்திகை நடத்தினர். போலீஸாரின் ஒரு குழுவினர் பிரிந்து கலவரத்தில் ஈடுபடுவது போல் ஒத்திகை செய்தனர். மற்றொரு குழு போலீஸார், அவர்களை கலைக்கும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும், லத்தியால் தாக்கியும் கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கலைப்பது போல் போலீஸார் ஒத்திகை செய்து காண்பித்தனர்.