குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டுயானைகளால் தொழிலாளர்கள் பீதி

நீலகிரி : குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்டத் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்டத் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இதில், காட்டுயானை, காட்டெருமை, மான், சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதியில் வறட்சி, தீவனப் பற்றாக்குறை, வழித்தட ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால், அங்கிருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதில், விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சில நேரங்களில் மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது குறைந்தபாடில்லை.



இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மஞ்சூர் அருகே உள்ள டெரேமியா, தூதூர்மட்டம், அனிமன், நாக்குநேரி ஆகிய பகுதிகளில் குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அங்கு மேரக்காய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் குந்தா வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அவை வனப்பகுதிக்குள் செல்லாமல் கிரேக்மோர், கிளன்கர்னி, குறியமலை ஆகிய பகுதிகளுக்குள் புகுந்தன. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு யானைகளால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...