மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் : பா.ம.க தலைவர் ஜி.கே மணி கோரிக்கை

கோவை : கர்நாடக மாநிலம் மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீறுவதாக இருப்பதாகவும், மத்திய அரசு ஒரு பக்கம் சாராமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டுமெனவும் பா.ம.க தலைவர் ஜி.கே மணி கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை : கர்நாடக மாநிலம் மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீறுவதாக இருப்பதாகவும், மத்திய அரசு ஒரு பக்கம் சாராமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டுமெனவும் பா.ம.க தலைவர் ஜி.கே மணி கோரிக்கை வைத்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கோவை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி கலந்துகொண்டார். 

அதில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே மணி கூறுகையில், "தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாக இருக்கக்கூடிய காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது. 

மேலும், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு என அனைத்தையும் உதாசனப்படுத்திவிட்டது.இது தமிழகத்தின் உரிமையை மீறுவதாக இருக்கிறது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்யாமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்." என்றார். 



மேலும், செய்தியாளர்கள் 5 மாநில தேர்தல் முடிவுகளையும், ஸ்டெர்லைட் திறக்க அளித்த அனுமதியும் குறித்து கேட்டதற்கு, "மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அவஸ்தையின் வெளிப்பாடே ஜந்து மாநில தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த தோல்வி. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்திருந்தாலும் திறக்க விடமாட்டோம் என மாநில அரசு கூறிய சவால் என்ன ஆனது," என பதில் கேள்வி எழுப்பினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...