பார்க்கிங் தளம் அமைப்பதற்காக உதகை குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி : உதகை நகரில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் பார்க்கிங் தளம் அமைக்கும் பணிக்காக நிலம் ஆய்வு செய்யப்பட்டது.

நீலகிரி : உதகை நகரில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் பார்க்கிங் தளம் அமைக்கும் பணிக்காக நிலம் ஆய்வு செய்யப்பட்டது.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் பெரும்பாலானோர் சொந்த வாகனங்கள் வைத்துள்ளனர். இதனால், குறுகிய நகரமான உதகையில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளுர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 



எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய பார்க்கிங் தளங்களை அமைக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில், பல ஆண்டுகளாக நிலவி வரும் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் ஒரு பகுதியில் பார்க்கிங் தளம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, உதகை கோட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் அரசு அதிகாரிகள் இன்று நிலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். வரும் கோடை சீசனுக்குள் பார்க்கிங் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...