திருப்பூர் : மடத்துக்குளத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்கள் பல்வேறு காரணங்களுக்காக புறக்கணிப்பதைக் கண்டித்து வட்டாச்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே இருக்கும் கடத்தூா், கணியூா், சோழமாதேவி, கல்லாபுரம் ஆகிய பகுதியில் சுமார் 7,500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இங்கு நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. தற்போது, அறுவடை செய்யப்பட்டு நெல்லை விற்பனை செய்வதற்காக, கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்றால், கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா நில உரிமை சான்று போன்ற ஆவணங்கள் கேட்டு அலைக்கழிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது, வருவாய்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், எந்தவித சான்றுகளும் வாங்க முடியாமல் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எந்தவித சான்றுகளும் இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை பெற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரி மடத்துக்குளம் வட்டாச்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.a