ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் 26 -ம் தேதி நீலகிரியில் உள்ளூர் விடுமுறை

நீலகிரி : நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் 26 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்டஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நீலகிரி : நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் 26 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்டஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு வசிக்கும் படுகர் இன மக்களால் ஸ்ரீ ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுப்படுகிறது. இவ்விழா டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் பேரகணி கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. 

இத்திருவிழாவில், படுகர் இனமக்கள் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் கலந்து கொள்வது வழக்கம். எனவே, இந்தத் திருவிழாவின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாகப் படுகர் இன மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹெத்தையம்மன் திருவிழா வரும் 26 -ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 



மேலும், இந்த விடுமுறைக்குப் பதிலாக அடுத்த மாதம் 5 -ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீலகிரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...