சென்னை : சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அரசியல் கட்சிகளின் சார்பில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதனால்,பல விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சட்டவிரோதமாக பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத பேனர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோதமாக பேனர் வைக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறுகையில், "சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசியல் கட்சியில் போய் சேர்ந்து விடுங்கள். பேனர்கள் அகற்றப்பட்டது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அளித்த அறிக்கை திருப்தியில்லை. ஐந்து வருடங்களாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நீதிமன்றம் சோர்ந்துவிட்டது, இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.