நில அபகரிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உடுமலை காவல் ஆய்வாளருக்கு உடனடி ஜாமீன்

திருப்பூர் : நில அபகரிப்பு வழக்கில் சாதகமாக செயல்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் உடுமலை காவல் ஆய்வாளருக்கு ஆண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர் : நில அபகரிப்பு வழக்கில் சாதகமாக செயல்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் உடுமலை காவல் ஆய்வாளருக்கு 1 வருட சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர், தாராபுரம் அடுத்த ஊத்துப்பாளையம் பகுதி விவசாயி தங்கமுத்து. இவர் தன்னுடைய ரூ.25 லட்சம் மதிப்புள்ள 4.80 ஏக்கர் விவசாய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த விவசாயி சின்னசாமி அபகரித்து விட்டதாகவும், அதற்கு உதவி காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் உள்ளிட்ட 9 பேர் உதவி செய்ததாகவும் கூறி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 

கடந்த 2013 -ம் ஆண்டு தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த இவ்வழக்கு 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு உடுமலை காவல் ஆய்வாளர் சிவக்குமார் சாதகமாகச் செயல்பட்டதற்காக, அவருக்கு தாராபுரம் குற்றவியல் நீதிமன்றம் 1 வருட சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 

இதுகுறித்து, தங்கமுத்து கூறும்போது மற்ற 8 பேருக்கும் தண்டனை அறிவிக்க வேண்டும். மேலும், அபகரிக்கப்பட்ட நிலத்தை என்னிடமே ஒப்படைக்க வேண்டும் என மேல்முறையீடு செய்ய உள்ளேன் என தெரிவித்தார். இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஆய்வாளர் சிவக்குமாருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...