பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் மனு கொடுக்க திரண்டதால் பரபரப்பு

கோவை : பணப்பலன்கள் வழங்குவதில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தீர்வு காண வலியுறுத்தி கோவை மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மனு அளித்தனர்.

கோவை : பணப்பலன்கள் வழங்குவதில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தீர்வு காண வலியுறுத்தி கோவை மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மனு அளித்தனர்.



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, கோவை மண்டலம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றவர்கள், இதில் கலந்துகொண்டு அரசு போக்குவரத்து கழகம் பொது மேலாளரிடம் தங்கள் மனுக்களை கொடுத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதில் குளறுபடி, தேவையற்ற காலதாமதம், ஓய்வூதிய விதிகள் சட்ட விதிகளுக்குப் புறம்பான கணக்கீட்டு முறைகேடுகளில் இதர கழகங்களை விட அடித்தட்டில் இருக்கும் கோவை கோட்ட நிர்வாகம், இதனை சரி செய்ய வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.



இதனிடையே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் திரண்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...