உதகை அரசு பள்ளி மாணவர்களுக்கு வானியல் நிகழ்வுகள் குறித்து விளக்கம்

நீலகிரி : உதகை ரேடியோ வானியல் ஆராய்ச்சி மையத்தில் காந்தியடிகளின் 150 -வது நினைவு ஆண்டையொட்டி மாணவர்களுக்குத் தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகள் விளக்கப்பட்டது.



நீலகிரி : உதகை ரேடியோ வானியல் ஆராய்ச்சி மையத்தில் காந்தியடிகளின் 150 -வது நினைவு ஆண்டையொட்டி மாணவர்களுக்குத் தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகள் விளக்கப்பட்டது.



மகாத்மா காந்தியடிகளின் 150 -வது நினைவு ஆண்டை முன்னிட்டு அவர் சென்ற இடங்களில் பயிலும் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்டுப்பிப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அமைச்சகத்தின் கலாச்சார துறை மற்றும் ஜவர்ஹலால் நேரு நினைவு அருங்காட்சியகம் அறிவுறுத்தியது. 

இதையடுத்து, உதகையில் இயங்கி வரும் ரேடியோ வானியல் ஆராய்ச்சி மையம் சார்பில் உதகையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கும் வகையில் வானியல் நிகழ்வுகள் விளக்கப்பட்டன. இதில் நிலவில் உள்ள மலைகள் குறித்தும் நட்சத்திரங்கள் மற்றும் வானியல் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 



மேலும், அவர்கள் கண்ட காட்சியை ஓவியமாக வரைந்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது வானில் உள்ள நிலா, நட்சத்திரம், சூரியன் ஆகியவற்றை வெறும் கண்களால் பார்க்கும் பொழுது ஒன்று தெரிவதில்லை. ஆனால், தொலைநோக்கியின் மூலம் அருகே காணும் போது அதன் தோற்றம் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. 

இது மேற்கொண்டு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...