குந்தா தாலுகாவில் தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதியளிக்கப்பட்டதை எதிர்த்து வாடகை வாகன ஓட்டுநர்கள் மனு

நீலகிரி : குந்தா தாலுகாவிற்கு மஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் வாடகை வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

நீலகிரி : குந்தா தாலுகாவிற்கு மஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் வாடகை வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குந்தா தாலூக்காவிற்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வாகனங்களை இயக்கி சுமார் 100 ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மஞ்சூர் பேருந்து நிலையம் அருகில் அவர்களுக்கான வாகனநிறுத்தம் அமைத்து வாகனங்களை இயக்கி வருகின்றனர்.



இந்த நிலையில், தற்போது சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விடுவதால் போக்குவரத்து இடையூறு மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. 

எனவே, மஞ்சூர் காவல்துறையினர் வாடகை வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு, தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளதாகவும், வாடகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் 30 வாகனங்களுக்கு மட்டும் நிறுத்த அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும், சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மஞ்சூர் பஜாரில் வாடகை வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கி தருமாறும் அவர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...