கேரளாவில் பூண்டுக்கு சரியான விலை இல்லாததால் உடுமலை விவசாயிகள் கவலை

திருப்பூர் : உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூண்டுக்கு சரியான விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


திருப்பூர் : உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூண்டுக்கு சரியான விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



உடுமலை அருகே தமிழக - கேரளா எல்லை பகுதியான மறையூா் காந்தலூா் மலைப் பகுதிகளில் பூண்டு அதிகளவில் விவசாயிகளால் பயிர் செய்யப்படுகிறது. தற்போது, பூண்டு விளைந்து பறித்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் பூண்டுக்கு உரிய விலை கிடைக்காததால் பயிர் செய்த பூண்டை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பூண்டு, தற்போது கிலோ ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. 



இந்த விலைக்கு விற்பனை செய்தால் கொள்முதல் செய்த பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால், பயிர் செய்த பூண்டுகளை வயல்வெளிகளில் பரண் போல் அமைத்து, மழை வெயிலில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். உரிய விலை வரும் போது விற்பனை செய்து கொள்வற்காக பாதுகாத்து வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...