கோவை : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவையில் இருந்து சென்னை வரை பனை, தென்னைகளை பாதுகாக்க வலியுறுத்தும் பரப்புரை பயணம் இன்று தொடங்கியது.
கோவை : தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கோவையில் இருந்து சென்னை வரை பனை, தென்னைகளை பாதுகாக்க வலியுறுத்தும் பரப்புரை பயணம் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி பரப்புரை பயணத்தை கோவை ரயில்நிலையம் அருகில் உள்ள கோபாலபுரம் பகுதியிலிருந்து தொடங்கி வைத்தார். திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல மாவட்டங்கள் வழியாக சென்னை சென்று வரும் 19-ம் தேதி முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது பிரதான கோரிக்கையான கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தவுள்ளனர்.

மேலும், நிபந்தனையில்லாமல் நீரா இறக்கி உள்நாட்டிலும், உலகளவிலும் அரசியல் தலையீடு குறுக்கீடு இல்லாமல் சந்தைப்படுத்த வேண்டும், பனை, தென்னை கருப்பட்டிக்கு மானியம் கொடுத்து ரேஷன் கடைகளில் விநியோகித்தல், கள் தடையைக் கண்டித்து வரும் ஜனவரி 21-ம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் அசுவமேத யாகம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனை, தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.