கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் சான்டா கிளாஸ் ஊர்வலம்

நீலகிரி : கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது.


நீலகிரி : கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது. 



வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் இரவு நேரங்களில் சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து, கேரல்ஸ் பாடல்களைப் பாடி இயேசு பிறந்த நாளின் சிறப்புகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், உதகையில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளும் ஒருங்கிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னோட்டமாக சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா பவனி நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது. உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தொடங்கி வைத்த இந்த ஊர்வலம், தாமஸ் ஆலயத்தில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை நகரின் முக்கிய வழியாக தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் நிறைவடைந்தது. இதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் துதி பாடல்களை பாடி ஊர்வலமாக வந்தனர். கடுங்குளிர் நிலவிய போதும் ஏராளமான மக்கள் சாலையில் இருபுறமிருந்து கிறிஸ்மஸ் தாத்தா பவனி வருவதைக் கண்டுகளித்தனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...