அரசு விழாவில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் தூங்கியதால் பரபரப்பு

திண்டுக்கல் : பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மேடையிலேயே தூங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் : பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மேடையிலேயே தூங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கூட்டுறவுத்துறை சார்பில் பல்பொருள் அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா பழனியில் நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயக்குமார் பேசினார். அந்த சமயத்தில் மேடையில் அமர்ந்திருந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையிலேயே‌ தூங்கி விழுந்தார். 



அவர் தன்னுடைய தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சில நிமிடங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர்‌ திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தூங்கினார். 



ஒரு அமைச்சர் பேசிக் கொண்டிருக்க, மற்றொரு அமைச்சர் அருகில் அமர்ந்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தூங்கி விழுந்தது விமர்சனத்திற்கு‌ உள்ளானது. அரசு விழா நடைபெறும் மேடையில், அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பொதுமக்கள் முன்னிலையிலேயே தூங்கிவிழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...