திண்டுக்கல் : பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மேடையிலேயே தூங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கூட்டுறவுத்துறை சார்பில் பல்பொருள் அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா பழனியில் நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயக்குமார் பேசினார். அந்த சமயத்தில் மேடையில் அமர்ந்திருந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையிலேயே தூங்கி விழுந்தார்.

அவர் தன்னுடைய தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சில நிமிடங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தூங்கினார்.

ஒரு அமைச்சர் பேசிக் கொண்டிருக்க, மற்றொரு அமைச்சர் அருகில் அமர்ந்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தூங்கி விழுந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசு விழா நடைபெறும் மேடையில், அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பொதுமக்கள் முன்னிலையிலேயே தூங்கிவிழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.