கோவையில் சீட்டு நிறுவனம் நடத்தி பண மோசடி செய்தவர் கைது

கோவை : கோவை சரவணம்பட்டி அருகே சீட்டு நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.


கோவை : கோவை சரவணம்பட்டி அருகே சீட்டு நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சுவாமிநாதன் (39). இவர் கோவை சரவணம்பட்டி அம்பாள் நகரில் பிரனோ சிட்ஸ் & ரியல் எஸ்டேட் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பழனிச்சாமி என்பவர் 2014 -ம் ஆண்டு முதல் 2016 -ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ரூ.29 லட்சம் வரை சீட்டுக்கும் ரியல் எஸ்டேட்டுக்கும் சாமிநாதனிடம் செலுத்தியுள்ளார். 

ஆனால், இந்தப் பணத்தை பழனிச்சாமி சாமிநாதனிடம் திரும்பக் கேட்கையில், சாமிநாதன் பணத்தைத் தர மறுத்ததுடன் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அன்னூரை சேர்ந்த பழனிச்சாமி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவிட சாமிநாதன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, காவல்துறை அவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவர் நாம் தமிழர் கட்சியில் இருப்பதாகவும் இவர் பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சுவாமிநாதன் தனிநபரா அல்லது குழுவாக இணைந்து செயல்படுகின்றனரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...