திருப்பூர் : திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் நடத்திய கைவினை பொருட்கள் கண்காட்சியில் தாய்மார்கள் குழந்தைகளுடன் நடனமாடிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
திருப்பூர் : திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் நடத்திய கைவினை பொருட்கள் கண்காட்சியில் தாய்மார்கள் குழந்தைகளுடன் நடனமாடிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் முகநூலில் குழுவினால் இணைந்த இல்லத்தரசிகள், தனி குழுவாக இணைந்து பெற்றோர் வலைபின்னல் என்ற அமைப்பைத் தொடங்கினர். இதில் தாங்களே தயாரித்த கைவினை பொருட்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்தும் விதமாக திருப்பூரில் சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் பெண்கள் தங்கள் கைவினை பொருட்கள், அலங்கார அழகுசாதன பொருட்கள், குந்தன் நகைகள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள், விளையாட்டு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். மேலும், தாய்மார்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது தங்கள் குழந்தைகளை ஹோல்டர் மூலம் கொண்டு செல்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் தங்கள் குழந்தைகளை ஹோல்டரில் வைத்தபடி, பாடல்களுக்கு ஏற்றார்போல் நடனமாடினர். தாய்மார்களின் இந்த நடனம் அனைவரையும் கவர்வதாக அமைந்தது. நவீன சமூகத்தில் இணையத்தைப் பயன்படுத்தி அரட்டை அடித்து காலத்தை விரையம் செய்து வருபவர்கள் மத்தியில் முகநூல் மூலம் இணைந்த பெண்கள் தனி அமைப்பாக உருவெடுத்துத் தொடர்ந்து தொழில்வாய்ப்பை உருவாக்கியிருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.