கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி : 5 பேர் கைது

கோவை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாக கூறி 40 -க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.



கோவை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாக கூறி 40 -க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.

கோவையில் உள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவருடைய நண்பர் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுகுணா ஆகியோர் சண்முகத்திடம் தமிழ்நாடு குடிசை மாற்று வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற பணம் கேட்டுள்ளனர். 

இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மற்றும் அரசு அலுவலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆட்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குறுதிகளை நம்பி சண்முகம் ஜெயக்குமார் மூலம் இடைத்தரகர்கள் என்ற பெயரில் செயல்படும் குஞ்சுமோன் மற்றும் காயத்திரியிடம் கடந்த 2014 -ம் ஆண்டில் ரூ.73 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்த நோக்கத்தைக் கடன் பத்திரம் போலவும் பிராமிசரி நோட்டில் எழுதிக் கொண்டனர். 

ஆனால் ஆண்டுகள் கடந்தும் பின்னும் வீடும், கொடுத்த பணமும் கிடைக்கவில்லை . ஆகவே, சந்தேகமடைந்த சண்முகம் இவர்களைக் குறித்து விசாரித்துள்ளார். அதில் இவர்கள் பல நபர்களிடம் இது போன்ற மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சண்முகம் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் அளித்த உத்தரவின் பேரில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் குஞ்சுமோனின் மனைவி காயத்திரி (55), மணியின் மகன் ஜெயக்குமார் (48), ஜெயக்குமாரின் மனைவி சுகுணா (38), ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், தலைமறைவாக இருந்த இருவரை காவல்துறை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, தற்போது செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மூசாவின் மகன் குஞ்சுமோன் (59), அதேபோல அதே பகுதியைச் சேர்ந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசில் செயல்பட்டு வரும் துளசிதாஸின் மகன் ஷாஜி (37) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...