திருப்பூர் : திருப்பூரில் இரண்டு வாரங்களாக குடிநீர் வராததைக் கண்டித்து காலிக்குடங்களைக் கையில் ஏந்தியபடி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 24 -வது வார்டு பகுதியில் முத்துநகர் , அப்புச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன . இங்கு வாரம் ஒருமுறை மாநகராட்சி சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது .

இந்நிலையில், இந்த முறை15 தினங்கள் ஆகியும் இன்னும் குடிநீர் சப்ளை செய்யப்படாமல் இருப்பதால் குடிப்பதற்கான நீரை பணம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர் காலிக்குடங்களுடன் திருப்பூர் கொங்குமெயின் சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதையடுத்து, தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.