ஒரே நாளில் குடல் இறக்கத்தைக் குணப்படுத்தி வீட்டுக்குச் செல்லலாம் : கோவை எல்.சி மருத்துவமனை முகாம்

கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள எல்.சி மருத்துவமனை நடத்தும் குடல் குறக்கம் தொடர்பான இலவச ஆலோசனை முகாம் டிசம்பர் 17 -ம் தேதி முதல் 27 -ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள எல்.சி மருத்துவமனை நடத்தும் குடல் குறக்கம் தொடர்பான இலவச ஆலோசனை முகாம் டிசம்பர் 17 -ம் தேதி முதல் 27 -ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று அம்மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ராஜன் கூறுகையில், "உலகில் 8 -ல் ஒருவர் தனது வாழ்நாளில் இந்தப் பிரச்சனையை சந்திக்கிறார். உடலின் பல்வேறு இடங்களில் தோன்றும் இது ஒரு பொதுவான நோயாக இருந்தாலும், பெரும்பாலும் அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதிகளில் பெரும்பாலும் ஏற்படுகிறது.



அதிக எடை தூக்குதல், தொடர்ந்து இருமல், மலக் கோளாறு போன்ற வகைகளில் நாம் வயிற்றுப்பகுதிக்கு கொடுக்கும் அதிகபட்ச அழுத்தம் காரணமாக இந்தக் குடல் இறக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனை நமது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இன்று லேப்ராஸ்கோப் மூலம் அகற்றிவருகிறோம்.

ஆரம்ப கட்டத்தில் சாதாரண நோயாகத் தோன்றும் குடல் இறக்கம், பின்னாளில் குடலை அழுகிப்போக வைக்கும் அளவுக்கு வீரியம் மிகுந்தது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக வரும் திங்கள் (17-ம் தேதி) முதல்  27-ம் தேதி வரை இலவச மருத்துவமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



தொடர்ச்சியாக பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மருத்துவ முகாமில் குடல் இறக்கம் குறித்து இலவச ஆலோசனை வழங்கப்படும். மேலும், குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...