கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள எல்.சி மருத்துவமனை நடத்தும் குடல் குறக்கம் தொடர்பான இலவச ஆலோசனை முகாம் டிசம்பர் 17 -ம் தேதி முதல் 27 -ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று அம்மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ராஜன் கூறுகையில், "உலகில் 8 -ல் ஒருவர் தனது வாழ்நாளில் இந்தப் பிரச்சனையை சந்திக்கிறார். உடலின் பல்வேறு இடங்களில் தோன்றும் இது ஒரு பொதுவான நோயாக இருந்தாலும், பெரும்பாலும் அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதிகளில் பெரும்பாலும் ஏற்படுகிறது.

அதிக எடை தூக்குதல், தொடர்ந்து இருமல், மலக் கோளாறு போன்ற வகைகளில் நாம் வயிற்றுப்பகுதிக்கு கொடுக்கும் அதிகபட்ச அழுத்தம் காரணமாக இந்தக் குடல் இறக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனை நமது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இன்று லேப்ராஸ்கோப் மூலம் அகற்றிவருகிறோம்.
ஆரம்ப கட்டத்தில் சாதாரண நோயாகத் தோன்றும் குடல் இறக்கம், பின்னாளில் குடலை அழுகிப்போக வைக்கும் அளவுக்கு வீரியம் மிகுந்தது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக வரும் திங்கள் (17-ம் தேதி) முதல் 27-ம் தேதி வரை இலவச மருத்துவமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மருத்துவ முகாமில் குடல் இறக்கம் குறித்து இலவச ஆலோசனை வழங்கப்படும். மேலும், குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும்." என்றார்.