காங்., இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பிரதமர் மோடிக்கு அடி : ஸ்டாலின் விமர்சனம்

டெல்லி : காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பிரதமர் மோடிக்கு பலத்த அடி கிடைத்துள்ளதாக என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி : காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பிரதமர் மோடிக்கு பலத்த அடி கிடைத்துள்ளதாக என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
 
இதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 198 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை (புதன்கிழமை) அந்தந்த மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கட்சியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பிரதமர் மோடிக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற அனைவருக்கும் தி.மு.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது," என்றார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...