நடுவட்டம் பேரூராட்சியில் 50 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலைய கட்டிடங்கள் இடிப்பு

நீலகிரி : கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பேரூராட்சியில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

நீலகிரி : கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பேரூராட்சியில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பேரூராட்சியின் வழியாக, கூடலூர் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், அங்குள்ள 50 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.

இதேபோல, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து உதகைக்கு சுற்றுலா வரும் வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளும் நடுவட்டம் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் இளைப்பாறி செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் பயனடைந்து வந்தனர்.

 
இந்த நிலையில், பேரூராட்சிக்கு சொந்தமான மிக பழமையான கடைகள் மற்றும் பேருந்து நிலைய கட்டிடம் ஆகியவற்றை இடித்து மூலதன மானிய திட்டத்தில் ரூ. 3 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம், உணவகம் மற்றும் புதிய கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே, இதில் கடைகளை நடத்தி வந்தவர்களால், பேரூராட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் முடிவடைந்ததை அடுத்து, இன்று காலை முதல் கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணிகள் தொடங்கியது. பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகீம் மேற்பார்வையில் பேரூராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...